03:12
அமெரிக்காவின் போர்ட் பென்னிங் நகரில் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் 25 மீ. பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் ஜெர்மனியின் கிறிஸ்டியான் ரெய்ட்ஸ் தங்கம் வென்றார். சீனாவின் டிங்பெங் வெண்கலம் வென்றார். இதில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 7-வது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ரஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம்சிங், சஞ்சீவ் ராஜ்புட், ராஹிசர்னோபட் அன்னுராஜ் ஆகியோர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
