
இந்தியாவுக்கு எதிராக ஆடும் இங்கிலாந்து அணியில் 2 வது கிரிக்கட் டெஸ்ட் போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கிறிம்ஸ் டிரம்லட் உரிய உடல் தகுதி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 22 வயது மிடில் ஒடர் வீரர் ஸ்டீவன் பின் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தசைபிடிப்பு காரணமாக டிரம்லட் அவதிப்படுகிறார். டிரன்ட் பிரிட்ஜ் டெஸ்டில் அவர் ஆடுவார் என இங்கிலாந்து கப்டன் ஆண்ட்ரு ஸ்டிராஸ் நம்பிக்கை தெரிவித்தார். பின் வியாழக்கிழமை டெர்பிஷயர் அணியுடன் மோதிய பின் 40 போட்டியில் 33 ரன்னுக்கு 5 விக்கெட் எடுத்து இருந்தார்.
டிரம்லட் ஆடாத பட்சத்தில் இங்கிலாந்து அணியில் இடம் பெற, பின்னுக்கும் யோர்க்ஷயர் ஆல் ரவுண்டர் டிம் பிரஸ்னன் இடையே போட்டி இருக்கும்.