
ட்ரென்ட்பிரிஜில் நடக்கும் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார்.
இன்றைய ஆட்டத்தில் அவர் வெறும் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது பயிற்சி போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்கமே தடுமாற்றமாக உள்ளது. முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் தொடக்க ஆட்டக்காரர் அபினவ்.
அவருக்குப் பின் டிராவிடும் லக்ஷ்மணனும் ஓரளவு நிதானமாக ரன்கள் குவித்தனர். 54 ரன்கள் எடுத்த லக்ஷ்மணன் டிம் பிரஸ்னன் பந்தில் அவுட்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 34 பந்துகளில்16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரை ஸ்டூவர்ட் ப்ராட் வெளியேற்றினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவை வெறும் 12 ரன்களுக்கு அவுட்டாக்கினார் ஆண்டர்சன்.