
டிரன்ட் பிரிட்ஜ் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3 ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் இயான் பெல் ரன் அவுட் ஆன பிறகு அவரை மீண்டும் ஆட இந்திய அணி அழைத்தனர்.
அதன் முடிவில் சச்சினின் பங்கே அதிகமிருந்ததாக இந்திய அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் டோனி ரன் அவுட் முடிவை திரும்பப் பெற விரும்பவில்லை என்றும் சச்சினின் தலையீட்டினால் தான் அணி வீரர்கள் அனைவரும் பெல்லை மீண்டும் துடுப்பாட்டம் செய்ய அழைக்க ஒப்புக் கொண்டனர் என்றும் பத்திரிக்கை செய்தி தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் டோனியிடம் நீங்கள் ரன் அவுட்டிற்கு முறையீடு செய்தீர்களா என்று 3 முறை கேட்கப்பட்டது. அவர் உறுதியாக ஆமாம் என்றார். பிறகு பிளவரும் ஸ்ட்ராசும் இந்திய கப்டன் டோனியிடமும், பிளெட்சரிடமும் பேசிய போதும் டோனி அவுட் அவுட் தான் என்று கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால் ஓய்வறையில் சச்சின் டெண்டுல்கர் பெல்லை மீண்டும் அழைக்குமாறு வலியுறுத்தியதாலேயே டோனி ஒப்புக் கொண்டார் என்று அந்தப் பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.