
பெல் கிரேடில் நடந்த செர்பியா ஓபன் டென்னிசில் செர்பிய வீரர் நோவக் சாம்பியன் ஆனார்.
அவர் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த பெர்னான்டோ லோபசை 7-6 (4), 6-2 செட் கணக்கில் வீழ்த்தினார்.
மூனிச் நகரில் நடந்த பி.எம்.டபிள்யூ ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் நிகோலோ டேவி டெர்சோ 6-3, 3-6, 6-1 செட் கணக்கில் ஜேர்மனி வீரர் ப்ளோரியன் மேயரை வீழ்த்தினார். ப்ளோரியன் தனது முதல் சாம்பியன் பட்டம் பெற முடியாமல் தோல்வியைத் தழுவினார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஓபன் டென்னிசில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் போட்டி ஜோடி லெனா வெஸ்னிவாவிட்ம் 4-6, 3-6 செட் கணக்கில் முதல் சுற்றில் தோற்றார்.