00:03
காயம் காரணமாக புனே வாரியர்ஸ் அணி வீரர் ஆசிஷ் நெக்ரா விலகி யதால், கடைசி கட்டத்தில் கங்குலிக்கு புனே வாரியர்ஸ் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி ஆகிய 2 அணிகளும் 4 -ம் பாகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை.
இதில் நடந்த 3 போட்டிகளில் கங்குலி மொத்தமாக 50 ரன்கள் எடுத் தார். தனது ஐ.பி.எல். மற்றும் தேசிய அணிக்காக ஆடிய அனுபவம் குறித்து பேசிய கங்குலி கூறியதாவது -
இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20, 4 -வது தொடரில் வாய்ப்பு கிடைத் து ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் வரை ஐ.பி.எல். லில் ஆட விரும்புகிறேன்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி எனது வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாகும். ஏனெனில் இப்போட்டியில் சதம் கடந்தது இப்போதும் நினைவில் உள்ளது.
இந்திய அணிக்காக நீண்ட காலம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது திருப்தி அளிக்கிறது. இதே போன்று ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா வுக்கு எதிரான சதம் மற்றும் கான்பூரில் தெ. ஆ. அணிக்கு எதிராக அடி த்த 50 ரன்களும் மறக்க முடியாதவையாகும்.
நான் இதுவரை எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் மெக்ராத்துக்கு எதிரான பந்து வீச்சே சவாலானது. மெக்ராத் பந்து வீச்சை சமாளித்து ஆடுவது எளிதல்ல. மிகவும் துல்லிதமாக பந்து வீசுவதில் அவர் தேர்ச் சி பெற்றவர்.
இந்திய வீரர்களில் பந்து வீச்சாளர் ஜாஹிர்கான், ஸ்ரீநாத் உள்ளிட்டோ ரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. சச்சினின் ஆட்டத்தை ரசித்துள் ளேன். அவரும், மே.இ.தீவு வீரர் லாராவும் நான் கண்ட சிறந்த பேட்ஸ்மேன்கள்.
சமீபத்திய வீரர்களில் வீரேந்திர சேவாக்கின் அதிரடி ஆட்டம் மற்றும் நுணுக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவ்வாறு கொல்கத் தா வீரரான கங்குலி கூறினார்.
