02:26
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கிராண்ட் பிரிக்ஸ் ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.பெண்கள் ஒற்றையர் கால் இறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் சாய்னாவும், ஜப்பான் வீராங்கனை மித்தானி மினாட்சுவும் மோதினர்.முதல் பாதி ஆட்டத்தில் சாய்னாவின் கை ஓங்கி இருந்தது. 2-வது ஆட்டத்தில் கோட்டைவிட்டார். வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது போட்டியில் சாய்னா 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஸ்கோர்: 21-13, 15-21, 21-7 . இதையடுத்து, சாய்னா கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் கால் இறுதி போட்டியில் சீனாவின் லி சூயிருவை சாய்னா சந்திக்கிறார்.
