

மேற்கிந்திய தீவுகளின் ஜமைக்கா மாகாணத்தில் கிங்ஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டில் இறந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
கேரி அலெக்ஸாண்டர் கடந்த 1928ம் ஆண்டு பிறந்தார். கடந்த 1957ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 961 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 30.3 ஆகும்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு சதம்(108) மட்டும் அடித்துள்ளார். மறைந்த கேரி அலெக்ஸாண்டருக்கு மேற்கிந்தி தீவுகள் கிரிக்கட் சபை இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜூலியன்ஹூன்ட் கூறுகையில்,
"கிரிக்கட் கப்டனாக பல விக்கெட் கீப்பர்களை அலெக்ஸாண்டர் உருவாக்கியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அவர் ஆற்றிய பணி மகத்தானது. மேலும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் வெள்ளை இனத்தைச் சேர்ந்த கடைசி கப்டன் இவர் ஆவார்".