06:26
லிபியாவில் கர்னல் கடாபியை பதவியில் இருந்து தூக்கி எறிய 5 மாதமாக போராட்டம் தீவிரமாகி வருகிறது.பதட்டம் நிறைந்து லிபியா பரிதவித்து நின்றாலும் லண்டன் ஒலிம்பிக் அந்த தேசத்தை மறக்கவில்லை. 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியை காண சில நூறு டிக்கட்டுகள் லிபியா தேசிய ஒலிம்பிக் கமிட்டியை வந்து சேர்ந்துள்ளது.
தேசிய ஒலிம்பிக் கமிட்டி மூலம் தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு ஒலிம்பிக் டிக்கெட்டுகள் தரப்படும. கர்னல் கடாபியின் மகன் முகமது அல்லா கடாபி லிபியா தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவராக உள்ளார். இந்த கமிட்டி ஒலிம்பிக் டிக்கெட்டுகளை பகிர்ந்து அளிக்கும்.
லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் பிரிட்டனும் களமிறங்கி உள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு என 88 லட்சம் டிக்கெட்டுகள் உள்ளன. இதில் 10 லட்சம் டிக்கெட்டுகள் அயல்நாடுகளில் உள்ள விளையாட்டு அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஜிம்பாப்வே, பர்மா ஆகிய நாடுகளும் லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்டுக்களை பெற்று உள்ளன. கர்னல் கடாபி, லண்டன் ஒலிம்பிக்குக்கு வரமுடியாது ஏனெனில் அவருக்கு சர்வதேச பயணத்தடை உள்ளது.
