
16:41
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, கிங்ஸ்டனில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. இதன்பின் 252 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.