22:02
இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரில் மட்டுமே 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு இடையே அதிகபட்சமாக 3 போட்டிகளை கொண்ட தொடர்களாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி வரும் 2014-ம் ஆண்டிலும் 2018-ம் ஆண்டிலும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
அப்போது இரு அணிகளும் இடையே 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரிகள் கமிட்டி கூட்டம், ஆங்காங்கில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆஷஸ் தொடர் தவிர பிற தொடர்களிலும் 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர் 5 போட்டிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் போர்டு இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
