22:10
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் 2012 ஏப்ரல் 4ல் துவங்கி, மே 27ல் முடிகிறது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதனிடையே ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் 2012, ஏப்ரல் 4ல் துவங்கி மே 27ல் முடியும். மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், கடந்த ஆண்டு 74 போட்டிகள் நடக்கும்,' என, தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் சிரயு அமின் கூறுகையில், "" ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க மற்றும் பைனல் தேதிகளை, பத்து மாதங்களுக்கு முன்பாக அறிவிப்பதில் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த தொடர்களை விட, புதிய பொலிவுடன் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க அனைத்து நாடுகளும் அதிக விருப்பமாக உள்ளன. ஆனால், குறிப்பிட்ட தேதிகளில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து----வெஸ்ட் இண்டீஸ், இலங்கை-பாகிஸ்தான் அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஹாங்காங்கில் நடக்கும் ஐ.சி.சி., கூட்டத்தில், எதிர்கால தொடர் அட்டவணை தயாரிப்பதில், இத் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
