
கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மெக்சிகோ அணி பெருவிடம் தோல்வியடைந்தது.
அர்ஜென்டினாவில் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் "சி" பிரிவு லீக் போட்டியில் மெக்சிகோ, பெரு அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இதே நிலை நீடீத்தது.
இந்நிலையில் போட்டியின் 82வது நிமிடத்தில் பெரு அணியின் கியாரோ மார்டினஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த மெக்சிகோ அணியினரின் போராட்டம் வீணானது. ஆட்டநேர முடிவில் பெரு அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இதேபிரிவில் உருகுவே, சிலி அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல்கணக்கில் "டிரா" ஆனது.