
இந்த ஆண்டு கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி மோசமான தோல்வியை தழுவியது.
கோப்பா பந்தயத்தில் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் என்னை மிகவும் பாதித்து உள்ளது என பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்சி கவலை தெரிவித்து உள்ளார்.
2 ஆண்டுகளில் கோப்பா அமெரிக்கா கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆக, மெஸ்சி உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோப்பா கால் இறுதியில் பெனால்டி ஷீட்டில் உருகுவேயிடம் அர்ஜென்டினா தோற்றது. இந்த தோல்வி மெஸ்சியை உறுக்கி உள்ளது.
இந்த தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நினைத்தற்கு மாறாக நடந்து உள்ளது. நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்புகிறோம் என மெஸ்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முக்கியமான ஆட்டங்களில் வருகின்றன உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற நாங்கள் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். பார்சிலோனா கிளப்பில் சிலி வீரர் அலெக்சிஸ் சான்செஸ் புதிதாக வந்துள்ளார். இதனை பெரிதும் வரவேற்பதாக மெஸ்சி தெரிவித்தார்.