
லண்டன் ஒலிம்பிக் போட்டி 2012 ம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவுக்கு இன்னும் 365 நாட்கள் தான் உள்ளன.
ஒலிம்பிக் கனவு, லண்டன் ஒலிம்பிக்கில் நனவாகிறது என போட்டியை நடத்தும் செபாஸ்டியன் கோ பெருமிதத்துடன் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்கான கட்டுமான பகுதிகள் பெருமளவு முடிந்து விட்டன. இருப்பினும் இந்த ஒலிம்பிக்கில் எந்த குறையும் சொல்ல முடியாத வகையில் மிக அபரிதமான பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது என அவர் தெரிவித்தார்.
லண்டன் ஒலிம்பிக்கை வரவேற்க மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த போட்டியை வரவேற்க தயாராகி விட்டார்கள். ஒலிம்பிக்கை காண 230 லட்சம் டிக்கெட்டுகளுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். 2.5 லட்சம் பேர் 75 ஆயிரம் தன்னார்வ பணிக்கு விண்ணப்பம் இருக்கிறார்கள்.
லண்டன் ஒலிம்பிக்கில் பிரிட்டன் வீரர்கள் சாதனை படைப்பார்கள், 2008 ம் ஆண்டு பெய்ஜிங் (சீனா) ஒலிம்பிக்கில் வென்ற பதக்க எண்ணிக்கையை இந்த லண்டன் ஒலிம்பிக்கில் மிஞ்சுவார்கள் என கோ நம்பிக்கை தெரிவித்தார்.