
சீனாவில் நடந்து வரும் உலக செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ரஷ்யாவுடன் மோதியது.
இதில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றியால் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இல்லை. அமெரிக்கா 5 வெற்றி, 5 டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அந்த அணி தங்கம் வெல்வது உறுதியாகிவிட்டது. போட்டியை நடத்தும் சீனா 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதால் அந்த அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைக்கும்.
ரஷியா, இந்தியாவிடம் தோற்றதால் உக்ரைன் 12 புள்ளிகளுடன் வெண்கலம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி 10 சுற்றுகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.