
இலங்கை செல்லும் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அணியில் நாதன் லயான், ஜேம்ஸ் பாட்டின்சன் மற்றும் டிரஸ்ட் கோப்லாஸ்ட் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்த வீரர்கள் ஜிம்பாப்வே பயணத்தின் போது அவுஸ்திரேலியா “ஏ”அணியில் சிறப்பாக ஆடினர்.
இலங்கை செல்லும் 15 உறுப்பினர்கள் கொண்ட மூத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணியில் 3 பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். துடுப்பாட்ட வீரர் ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டடுள்ளார். சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்து வீச்சாளர் ஹிபன்ஹாஸ், டோக் டோலிங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தோள்பட்டை காயத்தில் இருந்து நாதன் ஹாரிட்ஸ் மீளவில்லை. எனவே அவரது பெயர் அவுஸ்திரேலிய அணியில் பரிசீலிக்கப்படவில்லை. சுழல்பந்து வீச்சாளர் மைக்கேல் பீர்க்கு உதவியாக லயான் இலங்கை பயணத்திற்கு தேர்வு ஆகி உள்ளார்.
அவுஸ்திரேலிய அணி வீரர்கள்: மைக்கேல் கிளார்க் (கப்டன்), ஷான் வாட்சன், மைக்கேல் பீர், டிரஸ்ட் கோப்லேஸ்ட், பிராட் ஹாடின், ரயான் ஹமிஸ், பிலிப் லுயூஸ், மைக்கேல் ஹீசே, மிட்சேல் ஜான்சன், உஸ்மான் சவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பாட்டின்சன், ரிக்கி பொண்டிங், பீட்டர் சிட்லே ஆகியோர் ஆவார்கள்.