
22:27
கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஜாகூஸ் ரோக்கி கூறியதாவது:கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எனினும், அந்த விளையாட்டின் மீது ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அதிகமாகி வருகிறது. அதிலும், குறிப்பாக தொலைக்காட்சியில் அதிக பேர் பார்க்கும் விளையாட்டில் கிரிக்கெட் முன்னிலை வகிக்கிறது. நான் அலுவலகம் சென்றாலும் கிரிக்கெட் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. சச்சின், வோர்ன், போத்தம், பீட்டர்சன் ஆகியோர் எனக்கு பிடித்த வீரர்கள். இதுவரை நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால், விதிமுறைகள் எல்லாம் எனக்கு தெரியும். உலக அளவில் தற்போது இருபது-20 போட்டி பிரபலமாகி வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது பிரம்மிப்பாக உள்ளது. சமீபத்தில் நடந்த உலக கிண்ணத்தை அதிக அளவில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 5 நாள் ஆட்டம் முடிந்த போதும் போட்டி சமநிலையில் முடிவது கிரிக்கெட்டில் மட்டும்தான் நடக்கும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கான முடிவு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும். கிரிக்கெட் இடம் பெறும் பட்சத்தில் இருபது-20 போட்டி நடத்தப்படும் என ஜாகூஸ் ரோக்கி கூறினார்.