

தற்போது மேலும் ஒரு மைல்கல்லை நெருங்கி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்த்து அவர் 100-வது சதத்தை நெருங்கி உள்ளார். அதற்கு இன்னும் ஒரு செஞ்சூரி தேவை. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் சேர்த்து அவர் 99 சதம் அடித்து உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 21-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் அவர் இந்த சாதனையை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர்-ஜனவரி மாதம் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடினார். ஒரு நாள் போட்டியில் கடைசியாக உலக கோப்பையில் (ஏப்ரல்-மே) விளையாடினார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விலகினார். தற்போது புத்துணர்வுடன் இங்கிலாந்து தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளார். மேலும் இந்த தொடரில் அவர் 15 ஆயிரம் ரன்னை கடக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதற்கு இன்னும் 308 ரன் தேவை. இங்கிலாந்துக்கு எதிராக தெண்டுல்கர் 7 செஞ்சூரி அடித்துள்ளார். அந்நாட்டு மைதானத்தில் 4 சதம் எடுத்துள்ளார். இதனால் அந்நாட்டுக்கு எதிராக தெண்டுல்கர் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.