18:44
இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் ஜுன் மாதம் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் என, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரை கண்டுகளிக்க, தாமும் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு லாஹ{ரில் வைத்து இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது கிரிக்கட் அணி, இந்தியாவாக காணப்படுகிறது.
கிரிக்கட் ஊடாக இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்வதை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
