04:02
ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. இந்தத் தொடரில் மும்பை பெறும் 3-வது தோல்வியாகும் இது.
சண்டீகரிலுள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், பஞ்சாப் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக வந்த வல்தாட்டி 14 ரன்களும், கில்கிறைஸ்ட் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கில்கிறைஸ்ட் ஒரு சிக்ஸர், 2 பெüண்டரிகள் விளாசினார்.
ஆனால் 3-வதாக ஜோடி சேர்ந்த மார்ஷும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். கார்த்திக் 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 34 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அவுட்டானார். கார்த்திக் ஒரு சிக்ஸரும், 4 பெüண்டரிகளும் விளாசினார்.
பின்னர் வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முனாப் படேல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சச்சின் 6 ரன்களிலும், ரோஹித் சர்மா 5 ரன்களிலும் வீழ்ந்தனர். துவக்க ஆட்டக்காரர் பிளிஸ்ஸôர்ட் 15 ரன்களும், கைரன் போலார்ட் 17 ரன்களும் சேர்த்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பஞ்சாப் வீரர் பட் பந்துவீச்சில் கடைசி 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் அந்த அணி 87 ரன்களிலேயே சுருண்டது. 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பார்கவ் பட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரவீண்குமார் 2 விக்கெட்டுகளும்,பிபுல் சர்மா, ஹாரிஸ், ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபில் 4-வது சீசனில் மும்பை பெறும் 3-வது தோல்வியாகும் இது.
