16:41
4-வது ஐபிஎல் சீசனில் எந்த அணியாலும் கங்குலி ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புணே அணிக்காக கங்குலி தேர்வானார். ஆனால் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2 ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
இந்த நிலையில் டெக்கான் அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை அவர் களமிறங்கினார். அவர் மைதானத்துக்குள் நுழையும்போதே ஹைதராபாத் ரசிகர்கள் உற்சாகக் குரலிட்டு அவரை வரவேற்றனர். கங்குலி பெüண்டரி, சிக்ஸர் விளாசியபோது ரசிகர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைத் தொட்டது.
இந்த நிலையில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்குள் ஒரு ரசிகர் நுழைந்து கங்குலியின் காலில் விழுந்து வணங்கினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.
