00:04
ஐ.பி.எல் போட்டியின் 57வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் அணிகள் நேற்றிரவு இந்தூர் மைதானத்தில் மோதின.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்து 179 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் தினேஷ் கார்த்திக் 69 ஓட்டங்களையும், மார்ஷ் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். கொச்சி அணி சார்பில் ஆர்.பி.சிங் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இத்தோல்வியினால் கொச்சி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

