00:14
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 4-ந்தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, 5 ஓருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதன் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சென்னையில் நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் டோனி, தெண்டுல்கர், ஜாகீர்கான் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்ரிநாத், இஷாந்த் சர்மா, வினய்குமார், அமித்மிஸ்ரா, ரோகித் சர்மா, விர்த்தி மான்சாக, பிரவீண்குமார் ஆகியோர் அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு சகவீரர் வீராட் கோலி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் காம்பீர் திறமையானவர். அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி இருக்கிறேன். அவர் ஒரு சிறந்த கேப்டன். ஆடுகளத்தில் 100 சதவீத திறமையுடன் இருக்க கூடியவர்.
இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது தலைமையில் விளையாடி உள்ளோம். நெருக்கடிக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுக்கக்கூடியவர்.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான தெண்டுல்கர், ஷேவாக், டோனி ஆடாததால் எங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
