23:27
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஹோப்ஸ் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணி 11 ஆட் டத்தில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
பஞ்சாப் அணியில் கில்கிறிஸ்ட், வல்தாட்டி, மார்ஷ், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். முன்னிலை வாய்ப்பில் இருக்க வேண்டும்மென்றால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாக வேண்டும்.
டெல்லி அணி வெற்றி பெற்றாலும் எந்த பாதிப்பும் இல்லை.
இரவு 8 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கணக்கான வாய்ப்பில் இருக்கும். தோல்வி அடையும் அணி வாய்ப்பை இழக்கும். ராஜஸ்தான் 11 புள்ளியிலும், கொச்சி 10 புள்ளியிலும் உள்ளன.
