
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 7 வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, டெக்கன், புணே, ராஜஸ்தான், டெல்லி அணிகளை இங்கு வென்று இருந்தது. கொச்சி அணி 8 வது தோல்வியை தழுவி வெளியேறியது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கப்டன் டோனி, சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளோம். இது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும். இந்த ஆட்டங்கள் அனைத்திலும் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றதாக கருத வேண்டாம். சில ஆட்டங்களில் கடுமையாக போராடித்தான் வென்றோம்.
அடுத்த சுற்றில் மிகப்பெரிய ஆட்டத்துக்கு நாங்கள் தயாராகி விட்டோம். எங்களது பந்துவீச்சு, களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 24 ம் திகதி எதிர்கொள்கிறது