00:58
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேச இலங்கை முன்னணி வீரர் சங்ககாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 ம் திகதி அவர் பேசுகிறார். கிரிக்கட் விளையாடி வரும் ஒரு வீரருக்கு இத்தகைய கௌரவம் லார்ட்சில் அளிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
11 ஆண்டு கால லார்ட்ஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் கிரிக்கட் பற்றி பேச சங்ககாரவுக்கு (33 வயது) லார்ட்ஸ் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
