03:44

உலகின் முதல்தர வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி பிரஸ்சல்ஸ் ஓப்பன் டென்னிஸ் ஆட்டத்தில் திணறியே வென்றார்.
அவர் அமெரிக்காவைச் சேர்ந்த உலக அரங்கில் 85 வது இடத்தில் உள்ள வார்வரா லெப்சென்கோவை 6-4, 7-6 (7-5) செட் கணக்கில் வென்றார். இந்த வெற்றி மூலம் கரோலின் கால் இறுதிக்கு முன்னேறினார்.
அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த யானினா விக்மேயருடன் ஆடுகிறார். இந்த சீசனில் கரோலின் களிமண் ஆடுகளத்தில் தடுமாற்றத்துடனேயே ஆடி வருகிறார். நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான இத்தாலியின் பிரான்சஸ்சா ஷியாவோன் 6-4, 6-4 செட் கணக்கில் அமெரிக்காவின் இரினா பால்கோனியை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் செரிபியா நாட்டைச் சேர்ந்த 4 வது நிலை வீராங்கனை ஜெலினா ஜான் கோவிக் 3-6, 6-3, 6-3 செட் கணக்கில் ஸ்வீடனின் சோபியா அர்விட்சனிடம் தோற்றார்.
