06:01

டப்ளின் நகரில் நடந்த ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டியில் போர்டோ அணி 1-0 கோல் கணக்கில் பிரகா அணியை வென்று சாம்பியன் ஆனது.
பிரகா அணியின் மாற்று ஆட்டக்காரர் மொசோரோ ஒரு கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டார். அந்த வாய்ப்பை தவிர போர்டோ அணி வேறு எந்த சவால்களையும் பெறவில்லை.
போர்டோ அணியின் 33 வயது மேலாளர் ஆண்ட்ரோ வில்லாஸ் போஸ் ஐரோப்பிய லீக் சாம்பியன் பரிசு கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைத்தார். இருப்பினும் தனது அணி வீரர்கள் முழுத்திறனை ஆடுகளத்தில் காட்டவில்லை என்றும் சிறிது வருத்தப்பட்டார் போர்டோ அணியின் காப்டன் ஹெல்டன்.
தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடும் தருணத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த பரிசுக்கோப்பை எனது பிறந்த நாளின் அற்புதமான பரிசு என அவர் தெரிவித்தார். பிரகா அணியினர் கடுமையாக ஆடினர் என்றும் அவர் கூறினார்.
போர்டோ அணிக்கு ஆட்டத்தின் முதல் பாதியில் பால்கோ தலையால் அடித்த கோலே வெற்றி தேடித் தந்தது.
