00:36
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு சென்றார். டி.வி.கேமராமேன்கள் அவரை பின்தொடர்ந்து சென்று படம் பிடித்தனர். இதனால் கோபம் அடைந்த கெய்ல் தன் சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அவர்களை தள்ளி விட்டார்.கெயிலுடன் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களும் டி.வி.சேனலை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்தவர்கள் இருதரப் பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து கெய்ல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதுதொடர்பாக பெங்களூர் பத்திரிகையாளர்கள் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.
