00:38
விளம்பர வருமானத்தில் டோனி 10-வது இடத்தை பிடித்துள்ளார். விளம்பர வருமானத்தில் உலகில் முன்னணியில் உள்ள விளையாட்டு வீரர்கள் பட்டியலை இங்கிலாந்தின் “ஸ்போர்ட்ஸ் பிரோ” மாத இதழ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது.பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், கூடைப்பந்து வீரர் பிரையன்ட் ஆகியோரால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரர் உசேன் மோல்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதல் இடத்தில் இருந்த கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ 3-வது இடத்தையும், அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்குக்கு 49-வது இடம் கிடைத்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிக்கான ரன்களை குவித்ததன் மூலம் டோனிக்கும், தொடர் நாயகன் விருதை பெற்றதன் மூலம் யுவராஜ்சிங்குக்கும் விளம்பர வருமானம் குவிந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
