

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கட் அணி தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த அணி பாகிஸ்தான் செல்லாது என்றே கருதப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கட் வாரியத்தின் செயலர் நிசாந்த ரணதுங்க கூறுகையில்,"கடந்த மூன்று, நான்கு மாதங்களாக எங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்து வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் எங்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே கிரிக்கட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்" என்றார்.
கராச்சி அருகேயுள்ள கடற்படைத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இலங்கை இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.