22:40
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஹசானுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்குமாறு ஹசான் திலகரட்னவை அமைச்சர் அளுத்கமகே அறிவுறுத்தியுள்ளார்.
ஹசான் திலகரட்ன உறுதியளித்தபடி ஆட்டநிர்ணய சதி குறித்து தகவல்களை வழங்கினால் அவருக்கு பாதுகாப்பளிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை கிரிக்கெட் விளையாட்டின் நன்மை கருதி ஆட்டநிர்ணய சதியில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் இவ்விளையாட்டின் புகழை காப்பது ஹசான் திலகரட்வின் கடமை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
