03:50

அடுத்த வருடம் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஜாகூஸ் ரோக்கி கூறுகையில்,கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எனினும், அந்த விளையாட்டின் மீது ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக அண்மைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பெருமளவானோர் பார்த்து ரசித்ததது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நான் இதுவரை கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் விதிமுறைகள் எல்லாம் எனக்கும் தெரியும். உலக அளவில் தற்போது டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாகி வரும் போதும், இன்னமும் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களுக்கு இருக்கும் ஆதரவு குறையவில்லை.ஐந்து நாள் தொடர்ந்து போராடியும், போட்டி சமநிலையில் முடிவது கிரிக்கெட்டில் மட்டுமே நடைபெறும். ஒலிம்பிக்கில் கிர்க்கெட்டை சேர்க்க பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ முடிவு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும். கிரிக்கெட் இடம்பெறும் பட்சத்தில் டுவெண்டி20 போட்டி நிச்சயம் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என ஜாகூஸ் ரோக்கி தெரிவித்தார்.
