
16:27
இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 22 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலகுவாக வெற்றி பெற்றது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 225 ஓட்டங்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய ரஸ்ஸெல் 84 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். சர்வான், 28 ஓட்டங்களையும் சைமன்ஸ் 45 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் முனாப் படேல், மிஷாரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ரோஹித் ஷர்மா 86 ரன்களையும் பார்திவ் படேல் 46 ரன்களையும் எடுத்தனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என தொடரை வென்றுள்ளது இந்திய அணி.