22:33
மேற்கிந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
பூவா தலையா வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தாலும் ஆட்டக்களத்தில் சில இடங்களில் பிளவு இருந்ததால் ஒரு சில பந்துகள் அதில் பட்டு எகிறின.
85/6 என்ற சரிவு நிலையிலிருந்து அணியை மீட்டெடுத்த ரெய்னா (82), ஹர்பஜன் சிங் (70) ஆகியோர் சேர்த்த 146 ரன்களால் இந்தியா 246 ரன்கள் என்ற ரன் எண்ணிக்கையை எட்ட முடிந்தது.
இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் பந்துகள் எகிறின. ஹர்பஜன் சிங், அமித் மிஷ்ராவின் பந்துகள் முதல் நாளே நல்ல அளவில் விழுந்து நல்ல உயரம் எழும்பின.
லென்டில் சிம்மன்ஸ், இஷாந்தின் ஆஃப் கட்டருக்கு பேட்-பேட் கேட்சை ஃபார்வர்ட் ஷாட்ல் லெக்கில் கொடுத்தார் விஜய் அந்தக் கேட்சை பிடித்தார். சிம்மன்ஸ் 3 ரன்களுக்கு அவுட்.
85/6 என்ற நிலையில் களமிறங்கிய ஹர்பஜன் சிங் வந்தவுடனேயே தனது அதிரடி துடுப்பாட்டத்தினால் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் எட்டினார். 70 ரன்களை 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் அவர் 74 பந்துகளில் எடுத்து ஆட்டமிழந்தார்.
எட்வர்ட்ஸ் வீசிய பந்தை அவர் ஹுக் செய்ய ஃபைன் லெக் திசயில் தேவேந்திர பிஷூ அதனை அபாரமாக டைவ் அடித்து ஒரு கையில் பிடித்து அதிர்ச்சியளித்தார்.
115 பந்துகளைச் சந்தித்த சுரேஷ் ரெய்னா 15 பவுண்டரிகளுடன் 82 ரன்களை விளாசினார். இவரது கட், புல்ஷாட், டிரைவ்கள் அனைத்தும் அபாரமாக அமைந்தன.
கடைசியாக ரம்பால் பந்தில் ரெய்னா ஆட்டமிழந்தார் ஆனார். முன்னதாக அனுபவமற்ற துவக்க வீரர்களான அபினவ் முகுந்த்( 11) முரளி விஜய் (8) ஆகியோர் ரவிராம்பாலின் ஸ்விங்கிற்கு இரையாகினார்.
அனுபவசாலிகளான டிராவிட், லஷ்மண் இணைந்தபோது 12 ரன்கள் எடுத்த நிலையில் லஷ்மண், பிஷூ வீசிய லெக் ஸ்பின் பந்தை ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ராகுல் டிராவிட் அபாரமாக விளையாடி 40 ரன்கள் எடுத்திருந்த போது பிஷூவை ஒரே ஓவரில் 10 ரன்களை எடுத்த பிறகு லஷ்மண் போலவே பேட்டை நீட்டி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டோனியும் பிஷூவின் லெக்ஸ்பின்னிற்கு 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஸ்கோரர்களை தொந்தரவு செய்யாமல் வெளியேறினார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலி ஒருநாள் கிரிக்கெட் போலவே எட்வர்ட்ஸ் வீசிய அவ்வளவாக ஆபத்தில்லாத விட்டு விட வேண்டிய பந்தை மட்டையால் இடிக்கப் போய் ஆட்டமிழந்தார்.
எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளையும் ராம்பால், பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மேற்கிந்திய அணியில் ஆட்ட முடிவில் அட்ரியன் பரத் 26 ரன்களுடனும் சர்வாண் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
