00:57
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியினர் தாமதமாக பந்து வீசியதால் அணித் தலைவராக செயற்பட்ட சங்கக்காரவுக்கு போட்டி சம்பளத்தில் 40 சதவீத அபராதமும் ஏனைய வீரர்களுக்கு 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியினர் தாமதமான பந்து வீச்சை மேற்கொண்டதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆட்ட நடுவர் ஹலன் ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
