06:28
பிரிட்டனைச் சேர்ந்த ஜெசிகா எனிஸ் மான்செஸ்டர் தடகளம் போட்டியில் அற்புதமான வெற்றி பெற்றார்.
உலக மற்றும் ஐரோப்பிய தடகளப் போட்டிகளின் சாம்பியனான 25 வயது ஜெசிகா எனிஸ் நீளம் தாண்டுதல் போட்டியில் வெற்றி வாகை சூடினார்.
ஈட்டி எறிதல் போட்டியில் அவர் 2 வது இடம் பெற்றார். எனிஸ் இந்த ஆண்டு குதிகால் காயம் காரணமாக 7 வாரம் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.
மான்செஸ்டர் தடகளம் நீளம் தாண்டுதல் ஷெப்பீல்டின் முன்னனி வீராங்கனையான எனிஸ் 6.24 மீற்றர் தூரம் தாண்டி சாதனை படைத்தார். அவரையடுத்து வந்த அலெக்சாண்ட்ரா ரஸ்சலை விட 4 செ.மீ. தூரம் கூடுதலாக எனிஸ் பெற்றிருந்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் எனிஸ் 44.81 மீற்றர் தூரம் எறிந்து 2 வது இடம் பெற்றார். முதலிடத்தை பெற்ற ஹேலே தாமஸ் 49.96 மீற்றர் தூரம் எறிந்தார்
