
07:12
தென்ஆபிரிக்க அணி நிர்வாகம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு தனித்தனியே கப்டன்களை நியமித்தது சரியான முடிவென பயிற்சியாளர் ஹேஸ்டன் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக ஹேஸ்டன் நியமிக்கப்பட்டார்.ஒரு நாள் மற்றும் ருவென்ரி20 போட்டிகளுக்கு புதிய கப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டார்.டெஸ்ட் போட்டிக்கு ஸ்மித் கப்டனாக நீடிக்கிறார்.இது குறித்துஹேஸ்டன் கூறியதாவது;
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனியே கப்டன்களை நியமித்துள்ளனர்.இது அணியின் வளர்ச்சிக்கு நிச்சமயாக உதவுமென நினைக்கிறேன்.தென்ஆபிரிக்க வீரர்கள் உண்மையிலேயே மிகவும் திறமையான மற்றும் அனுபவமிக்க வீரர்கள்.இவர்கள் தற்போது வெற்றி பெற தவறுவது ஏன் என்று தெரியவில்லை.இரண்டாண்டு ஒப்பந்தத்தில் பணி புரிய வந்துள்ளேன்.உலகக் கிண்ணத்தொடர் வரை பணி புரிவதை பற்றி தற்போது சிந்திக்க வில்லையெனவும் கூறினார்.