05:30
ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட்போர்ன் நகரில், ஏகான் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜார்ஜியாவின் அனா டடிஷ்விலியை சந்தித்தார்.முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டை 3-6 எனக் கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட சானியா, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். இறுதியில் சானியா மிர்சா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தகுதிச்சுற்றுக்கான மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரியாவின் தமிரா பசக்கை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் ஒற்றையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பு பெறலாம்.
