
00:36
காற்பந்து உலகின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு விஜயம் செய்து காற்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
எதிர்வரும் செப்டெம்பர் 2ம் திகதி கொல்கத்தாவில் ஓர் நட்பு முறை சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஆர்ஜெண்டீனா - வெனிசூலா அணிகளுக்கு இடையில் இடம்பெறும் இப்போட்டியில், ஆர்ஜெண்டீனாவின் சார்பில் உலகின் முதல் நிலை வீரரான லியோனல் மெஸ்ஸி கலந்துகொள்ள இருக்கிறார். ஆர்ஜெண்டீனா சார்பில் மேலும் பல நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால், இவர்களது ஆட்டத்தை நேரடியாக கண்டுகளிப்பதற்கு இந்திய மக்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந் நாட்டில் இனிமேல் கால்பந்து போட்டிகளும் விருப்பத்தெரிவாக மக்கள் மனதில் இடம்பெறும் என இப்போட்டியை ஒழுங்கு செய்துள்ள ஃபீபா குழுத்தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார்.உலக கால்பந்து கூட்டமைப்பின் கால்பந்து வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அதற்கான நிதியுதவிக்காக இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.