22:21
ஆஸ்திரேலிய அணி "டுவென்டி-20', ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது.
வரும் ஆகஸ்ட் 6, 8ம் தேதிகளில் இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் நடக்கிறது. ஆகஸ்ட் 10, 14, 16, 20, 22ம் தேதிகளில் ஐந்து ஒருநாள் போட்டி நடக்கிறது. ஆகஸ்ட் 31, செப்டம்பர் 8, 16ம் தேதிகளில் மூன்று டெஸ்ட் போட்டிகள் துவங்குகின்றன.
இலங்கை-ஆஸ்திரேலியா தொடருக்கான அட்டவணை:
நாள் போட்டி இடம்
ஆக. 6 முதல் "டுவென்டி-20' கண்டி
ஆக. 8 2வது "டுவென்டி-20' கண்டி
ஆக. 10 முதல் ஒருநாள் கண்டி
ஆக. 14 2வது ஒருநாள் அம்பாந்தோட்டை
ஆக. 16 3வது ஒருநாள் அம்பாந்தோட்டை
ஆக. 20 4வது ஒருநாள் கொழும்பு
ஆக. 22 5வது ஒருநாள் கொழும்பு
ஆக. 31 முதல் டெஸ்ட் காலே
செப். 8 2வது டெஸ்ட் கண்டி
செப். 16 3வது டெஸ்ட் கொழும்பு
