05:53
இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்க வில்லை.வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்ததால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அட்ரியன்பரத், ராம்பால் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். எட்வர்டஸ், ஹயாட் நீக்கப்பட்டனர்.
5-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-
டாரன்சேமி (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ் சர்வான், சாமுவேல்ஸ், டாரன் பிராவோ, போலார்ட், ரஸ்சல், சால்டன்பவ், அட்ரியன்பரத், ராம்பால், மார்டின், ரோச்.
