21:34
ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், லியாண்டர் மற்றும் பூபதி ஜோ டி மற்றும் சோம்தேவ் வர்மன் மற்றும் நிஷிகோரி ஜோடிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்குள் நுழைந்தன.
மகளிருக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி 2 -வது சுற் றில் வெற்றி பெற்று 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் பிரிவில் சானியா, ரஷ்ய வீராங்கனை எலீனா வெஸ்னினா இணையுடன் இணைந்து ஆடி வருகிறார்.
இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந் த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் இந்திய அணி சார்பில் லியா ண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் வர்மன், ரோகன் பொபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஆன்டி முர்ரேவும், குரோ சிய வீரர் இவான் ஜூபிக்கும் மோதினர்.
4 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் முர்ரே 6 - 4, 4 - 6, 6 - 1 , 7 - 6 என்ற செட் கணக்கில் குரோசிய வீரர் ஜூபிக்கை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் சுமார் 1 மணி மற்றும் 25 நிமிடம் நீடித்தது.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோ வா, இங்கிலாந்து வீராங்கனை லவுராவை 7- 6, 6 - 3 என்ற செட் கண க்கில் வீழ்த்தினார்.
மற்றொரு 2 -வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங் கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6 - 0, 6 - 2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை மரியா ஜோசை தோற்கடித்து 3 -வது சுற்றுக்கு தகு தி பெற்றார்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி 6 - 7, 6 - 4, 6 - 4 என்ற செட் கணக்கில் குரோசியாவின் இவான் டூடிக் மற்றும் லோரோ இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சோம்தேவ் வர்மன் மற்றும் நிஷிகோரி (ஜப்பான்) ஜோடி 6 - 7, 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் மற்றும் அலெக்சாண்டர் இணையை தோற்கடித்தது.
மகளிருக்கான இரட்டையர் பிரிவின் 2 -வது சுற்றில் இந்தியாவின் சா னியா மிர்சா மற்றும் எலீனா வெஸ்னினா ஜோடி 6- 3, 5 - 7, 6 - 4 என்ற செட் கணக்கில் ரெனட்டா (செக். குடியரசு) மற்றும் கலீனா (கஜக ஸ்தான்) இணையை வீழ்த்தி 3 -வது சுற்றுக்கு முன்னேறியது.
