06:36
லண்டனில் 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
உலக நாடுகளை ஈர்த்துள்ள இந்த விளையாட்டிற்கான முதல்கட்ட டிக்கெட்டுகள் விற்பனை முடிந்தது. 2 வது கட்ட விற்பனையின் போது ஒலிம்பிக் டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் தீவிரம் கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரசிகர்கள் டிக்கெட் வாங்கும் முனைப்பில் ஒலிம்பிக் இணையதளத்தை நாடினர். காலை 6 மணிக்கு டிக்கெட் விற்பனை துவங்கிய போதும், இணையதளம் உரிய ஒத்துழைப்பு அளிக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒலிம்பிக் போட்டியை பார்வையிட 23 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட் விற்பனையின் முதல் கட்டத்தில் 12 லட்சம் பேர் டிக்கெட்கள் பெற முடியாமல் ஏமாந்தனர். இந்த நிலையில் டிக்கெட்டை வாங்க வேண்டும் என்கிற முயற்சியில் அவர்கள் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இணையதளம் உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை.
ஒலிம்பிக் இணையதளம் பழுதடையவில்லை அது செயல்படுகிறது. ஏராளமான நபர்கள் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்திருப்பதால் உரிய நேரத்தில் உங்களிடம் வரும் என 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
