22:23
இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மேற்கு இந்திய த் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலை மையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டது.
இதில் முதலாவதாக 20 -க்கு 20 போட்டி டிரினிடாட் தீவில், போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றன.
இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் தோனி, டெண்டுல்கர், ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சேவாக் மற்றும் காம்பீர் ஆகியோருக்கு அவர்களது விருப்பத்தின் பெயரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டி முதல் ஐ.பி.எல். தொடர் வரை அவர்கள் தொடர்ந்து விளையாடியதால் இந்தத் தொடரில் ஓய்வு வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர்கள் கோரிக்கை வைத் தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட வாரியம் மேற்படி மூத்த வீரர்களுக்கு 20 - க் கு 20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டியில் ஓய்வு கொடுத்தது. அவ ர்கள் டெஸ்ட் போட்டியில் ஆடுவார்கள். அவர்களுடன் லக்ஷ்மணும் இணைந்து கொள்வார்.
கேப்டன் தோனி உள்பட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதா ல், டெல்லி வீரரும், இந்திய அணியின் துவக்க வீரருமான காம்பீர் இந்தத் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் ஆடிக்கொண்டு இருந்த போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர் விளையாட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் உ.பி. வீரரான சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்தத் தொடர் குறித்து மே.இ.தீவு அணியின் பயிற்சியாளரான ஓட்டிஸ் கிப்சனிடம் கேட்ட போது, மே.இ.தீவு அணி சமீப காலமாக முன்னேறி வருவதாகவும், இளம் வீரர்களைக் கொண்ட அந்த அணி இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
