01:06
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா.
உலககோப்பை, ஐ.பி.எல் போட்டியில் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டி, ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கு ரெய்னா கப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்காலிக கப்டனான அவரையும், சூதாட்ட தரகரையும் இணைத்து தகவல் வெளியாகி உள்ளது. சூதாட்ட தரகர்களுடன் ரெய்னா இருப்பது போன்ற புகைப்படத்தை டெலிவிஷன் சேனல் ஒன்று ஒளிபரப்பு செய்துள்ளது. உலககோப்பை வெற்றிக்கு பிறகு ரெய்னா ஷிரிடி சென்றார்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் சூதாட்ட தரகர்கள் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதை சுரேஷ் ரெய்னா மறுத்து உள்ளார். அவர் கூறும் போது,"பலர் என்னுடன் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். உண்மையிலேயே எனக்கு அவர்கள் யார் என்று தெரியாது" என்றார்.
