03:45
-இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரியா மற்றும் இலங்கைக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தார்கள் என முன்னாள் இலங்கை அணித் தலைவர் ஹஷான் திலகரட்ண குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைக் கிரிக்கெட் தொடர்பான வெளிவராத தகவல்கள் பற்றிக் கலந்துரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆட்டநிர்ணயசதியில் அரவிந்த, ஜெயசூர்யா மற்றும் சுமதிபால ஆகியோரின் பங்களிப்புகள் மற்றும் இலங்கைக் கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றியும் இதன்போது திலகரட்ண ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறினார்.
எனினும் தம்மீது சுமத்தப்பட்ட இந்தக்குற்றச்சாட்டை அரவிந்த டி சில்வா மறுத்துள்ளார். சனத் ஜெயசூரியவும் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
