17:00

மே.இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற டுவெண்டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பத்ரினாத் 43 ஓட்டங்களையும் பார்திவ் படேல்இ ஷர்மா ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் சமி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 143 ரன்களையே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிக்கொண்டது. அதிகபட்சமாக பிராவோ 41 ரன்களையும் பார்ன்வெல் 34 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுக்களையும்இ பிரவீண் குமார்இ அஷ்வின்இ படேல் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டிநாயகனாக பத்ரினாத் தெரிவானார்.
மே.இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்குகொண்ட ஒரே ஒரு டுவெண்டி20 போட்டியாக இது அமைந்தது. முதலாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 6ம் திகதி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆரம்பமாகிறது.
