22:11
தரவரிசையில் 883 புள்ளிகளுடன் சச்சினும், தென்னாப்பிரிக்காவின் காலிஸிம் கூட்டாக முதலிடத்தில் உள்ளனர். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சச்சின் பங்கேற்கவில்லை. அவர் பங்கேற்காத ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அவருக்கு புள்ளிகள் குறையும். இதனால் காலிஸ் முதலிடத்தைப் பிடிப்பார். சச்சின் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்படுவார்.
38 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபின் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார். அதன்பிறகு ஓய்வு வேண்டுமென்பதால் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
வீரேந்திர சேவாக், கெüதம் கம்பீர், ஜாகீர்கான் ஆகியோரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் அவர்களும் தரவரிசையில் புள்ளிகளை இழந்து பின்தங்குவார்கள். சேவாக் இப்போது 6-வது இடத்தில் உள்ளார்.
இதேநேரம் இந்திய அணி இப்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி பெறும் வெற்றியும், தோல்வியும் டெஸ்ட் தரவரிசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
எனெனில் இரண்டாமிடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் 11 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. எனவே இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும் கூட தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கும்.
